søndag den 20. december 2009

கோளை(ழை)கள்.







மனங்களுக்குத் தெரியா
மனங்களின் மலையுச்சியில்
மனமும் உன் மனமுமாய்
மனவெளியில் காதலித்தோம்.

உண்மைதானே..!

மனசுக்கும் மனைவிக்குமான...
கொடுங் கூக்குரலில்...
மனதை நீ தொலைத்ததும்..

உண்மைதானே...

என்னை விட்டுவிடு...,
பொய்யன் நான்.
போய்த் தொலைகிறேன்.

(வி.மு க்கு சற்று முன்னால் எழுதப்பட்ட ...மரபுக் கவிதையில் இருந்து எடுக்கப்பட்டது இது)

குறிப்பு..
வி.மு என்றால்
விவாகரத்துக்கு முன்.

tirsdag den 8. december 2009

கவிமனசு

கவிமனசு






எனக்கான கவிதையை
நான் எப்போ எழுதுதல் கூடும்.?

மற்றையோர்க்காய்..மற்றவரைப் பற்றியே
மற்றைய மொழியில்
மாற்றானோடு
மூடுதிரைகளினூடு நடத்தும்
உனதும் எனதுமான தொடர்பாட்டம் எப்போது நிற்கும்..?

எனக்கான மொழியில்
எனக்கேயான வெளியில்
அழகிய சந்தம்நிறை கவிகளை
நின் காதலொடு தொடுக்கும் நாள் எந்நாளோ..?

மீளாவடிமையாய்..சுந்தரனும்
மீராவும் ஆண்டாளும்
இதற்காகத்தானோ என்னவோ
யதார்த்தத்தில் இல்லாத கடவுளுடன் காதல் கொண்டனர்???

torsdag den 12. november 2009

kavithai

ஞானம்.







எல்லாமுமே அந்தந்த இடத்தில்
வைத்தாயிற்று.
அடுத்ததை எங்கே வைக்க என்று
எனக்கும் தெரியவில்லை அவளுக்கும் தெரியவில்லை.
அடுத்தது என்பது...............
எதை எடுத்தாயோ அதற்கப்புறம் எடுத்தது.

søndag den 8. november 2009

டீ யும் டா வும்

டீ யும் டா வும்

என் கனவுகளைத் தின்றுகொண்டிருந்தபோது
மேலும் ஒரு பிச்சைக்காரி வந்தாள்.
எனக்கேயில்லை உனக்குமா??
ம்......ம்..
பிடி இதுதான் மீதி, நான் தின்றதன் பாதி.
நான் ஒரு பாதி
நீ யொரு பாதி
என்ற கனவின் பாதியை
இப்பொழுதும் அந்தப் பைத்தியக்காரி
தின்று கொண்டிருகிறாள்.
நான் மீண்டும் கனவுப் பிச்சை எடுக்க வேண்டும்
எடுத்தால்தான் உனக்குக்கூட பாதி கிடைக்கும். என்ற
அறிவுரை கூட...
எட்டாமல்..இருப்பவளை
என்ன செய்ய...............
போய்த் தொலைங்கடீடீடீடீடீ..................!!!!!!!!

onsdag den 21. oktober 2009

பின்னூட்டங்களின் சந்திப்பு

நிலவெறித்த ஒரு
பின்னிரவில்
பின்னூட்டங்கள் பேசிக்கொண்டன.
அ,ஆ,இ,ஈ என
நான்காய்
குழுவாய்
பிரித்து ஓய்ந்தபின்னர் அமர்ந்து கொண்டன
தத்தமது இருக்கைகளில்.
(காப்பியில் கண்ணானோரெ அதிகம். இங்கே காப்பி என்பதை பிரதி என்கிற அர்த்தத்தில் கண்ணுறுக)
....
அ,
சொல்லிற்று எனக்குக் கவிதைகள் பிடிக்குமென.
ஆ.........வோ ஆ வென விழித்து
இதற்கெல்லாமா என்றது.
இ,
சொல்லிற்று எனக்கு அரசியல் பிடிக்குமென.
ஈ யோ மெளனமாய் இருந்தது.
....
அவரவர்க்கான நண்பர்களுக்கு
பின்னூட்டமிடுவதே முறையென
முடிவெடுக்கும் போது
காப்பியும் வந்தது.
....
கை குலுக்கி , வாழ்த்துச்சொல்லி
கலைந்தன பின்னூட்டங்கள்.
....
என்னையும் கூட்டிச்செல்லுங்களேன் என்று
தடுக்கி விழுந்த பின்னூட்டம் ஒன்றின்
பிடிவாதச் சங்கொலி மட்டும்
கேட்டுக் கொண்டேயிருந்தது.

tirsdag den 7. juli 2009

கனவின் நடனங்கள்

அன்பிற்குரியோரே....
இந்த இணைப்பையும் போய்ப் பாருங்கள்.
http://kanavin-nadanankal.blogspot.com/
இதுவும் எனதொரு வலைப் பூவே.....!
அங்கே நான் இப்போ எழுதுவதில்லை.
உள்வெளிக்கு வாருங்கள்.
நிறையவே எழுதக் காத்திருக்கிறேன்
நன்றி.

søndag den 15. marts 2009

கவியெழுதுதற் கல்வி.


ஒருவன் குதிரையில் வந்தான்.
மற்றவன் நடந்து வந்தான்.
நான் அடுத்ததாக என்ன செய்யப்போகிறேன் என்று சரியாகச் சொல்வாயானால் என் குதிரையைத் தருகிறேன்.
என்றான் குதிரயில் வந்தவன்.
நீ உன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு இந்த நாட்டை விட்டே ஓடப்போகிறாய். என்றான் நடந்து வந்தவன்.
இல்லை, உன் பதில் தவறு. அடுத்ததாக இதை நான் செய்யப் போவதில்லை என்றாலும் என் குதிரையைத் தருகிறேன்.
பதில் தவறு என்றால் ஏன் குதிரையைத் தருகிறாய்..? கேட்டான் நடந்து வந்தவன்.
நீ எனக்குச் சொன்ன புத்திமதிக்கான அன்பளிப்பு இது என்றான் குதிரைக்காரன்.
எதிராளியிடமே ஐடியாக் கேட்பது வழமையாகிவிட்டது.
எங்களுக்கென்று ஒரு தனித்துவப் படைப்பாற்றல் அருகிக்கொண்டே போகிறது
தமிழ் நாட்டு அரசிலைப் போல.
எதிராளியின் பலத்திலும் பலவீனத்திலுமே..எங்கள் படைப்பாற்றல் தங்கியிருக்க வேண்டுமா..?
இலக்கியக்காரர் கூட ஏன் இப்படி நடக்கிறார்கள்..?
நான் மதிக்கும் பெரியோர்கள் கூட இப்படி சிறுமைப் படுகிறார்கள்.
இந்த வேதனகளை எங்கே கொண்டு சரி பார்க்க நான்..???
இப்படி ஒரு கவிதை எழுததொடங்கினான் அவன்.

lørdag den 7. marts 2009

சில படைப்புகள்

மனசில் பட்டதை அவ்வப்போது எழுதுகிறேன். காத்திருங்கள்.